Skip to content
BREAKING
ADVERTISEMENT
TamilnaduBREAKING

"முதலமைச்சர் செல்லும் வழியில் வரக்கூடாது என கைது செய்வதா?" – தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா ஆவேச வீடியோ!

சர்வாதிகாரத்தின் உச்சம் தொடும் தவெக

"முதலமைச்சர் செல்லும் வழியில் வரக்கூடாது என கைது செய்வதா?" – தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா ஆவேச வீடியோ!

தாராபுரம்:

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவைப் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

"நானும் வேட்பாளர்தான்.. மக்களைச் சந்திக்கக் கூடாதா?" – வேட்பாளர் குமுறல்

முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் பாதையில் வரக்கூடாது எனக் கூறி காவல்துறையினர் தம்மைக் கைது செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி, வாகனத்திற்குள் இருந்தபடி வேட்பாளர் கார்த்திகா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது:

  • "இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் விஜய் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய வேண்டுமா? நானும் இந்தத் தொகுதியின் வேட்பாளர்தான், நான் மக்களைச் சந்திக்கக் கூடாதா? முதலமைச்சர் செல்லும் வழியில் கூட வரக்கூடாது என்று கூறி போலீசார் என்னை அராஜகமாகக் கைது செய்துள்ளனர்"

ADVERTISEMENT

என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்

இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள சூழலில், முதலமைச்சரின் வருகையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்குத் தடை விதிப்பதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஜனநாயக விரோதமானது என நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் தாராபுரம் தொகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ShareXFacebook

Reader Comments

Comments are reviewed by our desk before they appear. Sign in with your mobile number to join the discussion.

Web Stories

More stories ›