இன்றைய முக்கிய சர்வதேசச் செய்திகள் (06 அக்டோபர் 2026)
06 அக்டோபர் 2026

1. பாலஸ்தீனம்: காசாவில் தொடரும் இஸ்ரேலின் தொடர் படுகொலைகள்
தினசரி இழப்புகள்: மேற்குக் கரை மற்றும் காசா எல்லைகளில் தினமும் குறைந்தது ஒரு பாலஸ்தீனரையாவது குறிவைத்து படுகொலை செய்வதை ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் வேதனை தெரிவிக்கின்றன.

சோதனைச் சாவடிகள் மற்றும் அகதிகள் முகாம்களில் அப்பாவி இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
2. ஏமன் எதிர்ப்புப் படைகளைச் சமாளிக்க சவூதி திணறல்: பாகிஸ்தான், துருக்கியை நாடும் ரியாத்
மெக்கா ஒப்பந்தத்தை (Mecca Agreement) கையில் எடுத்த சவூதி: ஏமனின் அன்சாருல்லா படைகளின் கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தற்காப்புத் தாக்குதல்களைத் தனித்துச் சமாளிக்க முடியாமல் சவூதி அரேபியா திணறி வருகிறது.

இதன் காரணமாக, Mecca Agreement எனும் இருதரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்களின் தரைப்படை மற்றும் ராணுவப் பிரிவுகளை சவூதி மண்ணில் உடனடியாக இறக்க வேண்டும் என ரியாத் தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறது. (மக்கா ஒப்பந்தம் என்பது, மக்கா நகரை எவரேனும் தாக்கினால், துருக்கி மற்றும் பாகிஸ்தான் ராணுவம் உதவிக்கு வந்து நிற்கும்)
அமெரிக்கக் கடற்படையே செங்கடலில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழலில் சவூதியின் இந்நடவடிக்கை கவனிக்கத்தக்கது.
3. மேற்கு ஆசியாவில் அரபு நாட்டின் ‘False Flag’ சதி திட்டம்: ஏமன் அன்சாருல்லா பகீர் எச்சரிக்கை!
பழியைப் போடும் நாடகம்: மேற்கு ஆசியாவில் உள்ள குறிப்பிட்ட ஒரு அரபு நாடு, பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய போலியான நாசவேலைத் தாக்குதலை (False Flag Operation) சுயமாக நடத்திவிட்டு, அந்தப் பழியை ஏமன் எதிர்ப்புப் படைகள் மீது சுமத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏமன் ராணுவம் எச்சரித்துள்ளது.

சர்வதேச ஆதரவைத் திரட்டவும் ஏமன் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தவும் எப்ஸ்டீன் (Epstein) வட்டார நட்பு சக்திகளுடன் இணைந்து இந்த சதி வலை பின்னப்படுவதாக ஏமன் தரப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
4. அமெரிக்கத் தேர்தலைச் சாட நடக்காத இந்தியத் தேர்தலைக் குறிப்பிட்ட டிரம்ப்

அமெரிக்கத் தேர்தல் முறையை "ஊழல் நிறைந்தது" என்று விமர்சிக்கும் நோக்கில், இந்தியாவில் நடைமுறை சாத்தியமில்லாத / நடக்காத ஒரு தேர்தல் நிகழ்வைத் தவறாகக் குறிப்பிட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்தில் பேசியுள்ளது அமெரிக்க மற்றும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மீது தாக்குதல்: 11 இந்திய மாலுமிகள் படுகாயம் – இந்தியா கண்டனம்
நடுவானில் பாய்ந்த ஏவுகணை: சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) சென்ற வணிகக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை/எறிபொருள் பாய்ந்து வெடித்ததில் கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகள் படுகாயமடைந்துள்ளனர்.

சர்வதேச கடல்சார் வர்த்தக வழித்தடத்தில் பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
6. சிஐஏ பாணியில் ஜப்பான்: முதல் தேசிய உளவு அமைப்பை அமைக்கிறது டோக்கியோ

ஜப்பானிய சிஐஏ: கிழக்கு ஆசியாவில் சீனா மற்றும் வடகொரியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் ‘சிஐஏ’ (CIA) பாணியில் முழுமையான வெளிநாட்டு உளவுப் பிரிவைக் கொண்ட தனது முதல் அதிகாரப்பூர்வ தேசிய உளவு அமைப்பை (National Intelligence Agency) கட்டமைக்க ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது.
7. இந்தியாவில் ஷேக் ஹசீனாவின் இருப்பு: வங்கதேச பிரதமரின் பயணத்திற்குப் பெரும் முட்டுக்கட்டை

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசியல் மற்றும் பொதுவெளி நடவடிக்கைகள், தற்போதைய வங்கதேசப் பிரதமரின் இந்தியப் பயணத்தைத் திட்டமிடுவதில் மிக முக்கியமான ராஜதந்திர சவாலாக (Principal Challenge) மாறியுள்ளதாக மூத்த ஆலோசகர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார்.
8. கென்யாவில் காங்கோவிலிருந்து பரவிய முதல் எபோலா பலி: நைரோபியில் பீதி
காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து கென்யாவிற்குப் பயணித்த நபர் ஒருவர் நைரோபி மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் முதல் 'இறக்குமதி எபோலா' (Ebola) பாதிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது; இதனால் எல்லையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
9. ஐ.நா பொதுச்செயலாளருடன் பாகிஸ்தான் துணைப் பிரதமர் அவசரப் பேச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸை நேரில் சந்தித்த பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், காசா மோதல், காஷ்மீர் விவகாரம் மற்றும் தெற்காசியப் பிராந்தியப் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
10. ஏமன் மீது குண்டுவீச்சு – சவூதி விமான நிலையங்களைத் தாக்கிய ஏமன் படைகள்
ஏமனில் உள்ள அன்சாருல்லா அமைப்பின் முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்க-கூட்டுப் படைகள் சரமாரி வான்வழித் தாக்குதல்களை நடத்தின; இதற்குப் பதிலடியாக சவூதி அரேபியாவின் எல்லைப் பகுதி விமான நிலையங்களைக் குறிவைத்து ஏமன் ஏவிய டிரோன் தாக்குதல்களில் சவூதி பகுதியில் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
11. பிரான்சில் போலீஸ் - போராட்டக்காரர்கள் மோதல்: உயர்நிலைப் பள்ளி அதிரடி மூடல்

பிரான்சில் தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டங்கள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக முக்கிய உயர்நிலைப் பள்ளிகளை அந்நாட்டு கல்வித்துறை நிர்வாகம் காலவரையின்றி மூடி உத்தரவிட்டுள்ளது.








Reader Comments
Comments are reviewed by our desk before they appear. Sign in with your mobile number to join the discussion.