Skip to content
BREAKING
ADVERTISEMENT
TamilnaduBREAKING

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு அமோக வரவேற்பு : செல்லும் இடமெல்லாம் திணறும் முதல்வர் விஜய்?

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு அமோக வரவேற்பு : செல்லும் இடமெல்லாம் திணறும் முதல்வர் விஜய்?

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் யுத்தம் வெடித்துள்ளது.

2 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காகக் களம் இறங்கியுள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஆளும் அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களால் முதல்வர் விஜய் செல்லும் இடங்களில் கடுமையான அரசியல் சவால்களையும் பின்னடைவுகளையும் சந்தித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

மக்களிடையே எழுச்சி பெறும் மு.க. ஸ்டாலின் ‘ரோடு ஷோ’

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைத்து ஆளும் தவெக அரசை நேரடியாகத் தாக்கிப் பேசி வருகிறார்.

அரசு மீதான அதிருப்தி: "திமுக தந்தது உண்மையான மக்கள் நல ஆட்சி; ஆனால் தற்போது நடப்பது விளம்பரங்களுக்கான ரீல்ஸ் ஆட்சி மட்டுமே" என்று சாடிய ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

ADVERTISEMENT

மக்கள் திரள்: ஸ்டாலின் பங்கேற்ற வாகனப் பேரணிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தது திமுக முகாமிற்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மின்வெட்டு, நிர்வாகக் குளறுபடிகள் போன்ற உள்ளூர் பிரச்சனைகளை அவர் அழுத்தமாகக் கையில் எடுத்துப் பேசியது களத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேர்தல் களத்தில் தடுமாறும் முதல்வர் விஜய் தரப்பு

மறுபுறம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் விஜய், தேர்தல் களத்தில் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.

எதிர்பார்ப்பும் அதிருப்தியும்: வழக்கமான சினிமா பாணி கவர்ச்சியையும் தாண்டி, ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள், தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கம் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமலும் ராஜினாமா செய்த MLA கள், மீண்டும் மக்களை நேரில் சந்திக்க இயலாமலும் ஆளும் தரப்பு திணறி வருகிறது.

களத்தில் பின்னடைவு: பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் குறைவு , தடுப்புகள் அமைப்பு, கட்டுப்பாடுகள் மீதான அதிருப்தி ஆகியவை பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அரசு நிர்வாகக் குறைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் சூழலில், அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு விஜய் முன்வைக்கும் பதிலடிகள் வாக்காளர்கள் மத்தியில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி 'பல்பு வாங்கும்' நிலையை உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இதன் காரணமாக டீக்கடையில் டீ குடிப்பது, வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டுவது என கப்பிரச்சாரத்தில்

இடைத்தேர்தல் யாருக்குச் சாதகம்?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனுபவமிக்க அரசியல் வியூகத்துடன் தொகுதிப் பிரச்சனைகளைத் துல்லியமாகத் தொட்டுப் பேசி மக்களின் ஆதரவை ஈர்த்து வரும் வேளையில், ஆளும் முதல்வராக முதல்முறையாக இடைத்தேர்தல் சோதனையை எதிர்கொள்ளும் விஜய், களத்தின் தீவிரத் தன்மையைச் சமாளிக்கப் பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இடைத்தேர்தல் முடிவுகள் தற்போதைய ஆட்சிக்கு மக்கள் வழங்கும் இடைக்காலத் தீர்ப்பாகப் பார்க்கப்படுவதால், தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது.

ShareXFacebook

Reader Comments

Comments are reviewed by our desk before they appear. Sign in with your mobile number to join the discussion.

Web Stories

More stories ›