Skip to content
BREAKING
ADVERTISEMENT

இன்றைய முக்கிய சர்வதேசச் செய்திகள் (08 அக்டோபர் 2026)

08 அக்டோபர் 2026

இன்றைய முக்கிய சர்வதேசச் செய்திகள் (08 அக்டோபர் 2026)

மத்திய கிழக்கு: சவூதி - ஏமன் தீவிர மோதல் & போர்ச் சூழல்

  • சவூதி மற்றும் ஏமனில் 3 விமான நிலையங்கள் மீது ஏமன் அன்சாருல்லா ஏவுகணைத் தாக்குதல்:

சவூதி அரேபியாவின் அபா (Abha), ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஏமனின் ஏடன் விமான நிலையங்கள் மீது ஹவுதி படைகள் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் மொரோக்கோ, அல்ஜீரியா, சூடான் நாடுகளைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

  • ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் – கேப்டன்களுக்கு $1,50,000 போனஸ்:

  • ADVERTISEMENT

    ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தால், சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல்களின் கேப்டன்களுக்கு ஒரு பயணத்திற்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் கூடுதலாக 50,000 டாலர் வரை அபாய போனஸ் வழங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $104-ஐத் தாண்டியுள்ளது.

  • சிரியா படைகளை ஏமனுக்குள் இறக்க சவூதி பேச்சுவார்த்தை:

    ஏமனில் அன்சாருல்லா படைகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த சிரியப் படைகளை ஏமனின் போர்க்களத்தில் களமிறக்குவது குறித்து சவூதி அரேபியா - சிரியா இடையே தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், இதற்கு அமெரிக்கா ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

  • ரஷ்யா - உக்ரைன் & ஐரோப்பிய விவகாரங்கள்

    • கிராமாடோர்க் நகரில் பேருந்துகள் மீது ரஷ்யத் தாக்குதல் – 30 பேர் பலி:

      கிழக்கு உக்ரைனின் கிராமாடோர்க் பகுதியில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 30 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • ரஷ்யா அருகே எண்ணெய் கப்பல் தீ விபத்து – 23 இந்திய மாலுமிகள் மீட்பு:

      ரஷ்யக் கடல் பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளான கச்சா எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்த நிலையில், அதிலிருந்த 23 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    • பிரிட்டன் கடற்படை அதிகாரி மீது உளவு வழக்கு:

      வெளிநாட்டு உளவு அமைப்புக்காக ரகசியங்களை வழங்கியதாக பிரிட்டிஷ் ராயல் கடற்படை அதிகாரி டெடி யங் மீது லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

    சர்வதேச அரசியல் & சமூகக் கொந்தளிப்பு

    • நோபல் அமைதிப் பரிசுக்கான உரிமை கோரிய டிரம்ப்:

      கடந்த ஓராண்டில் உலகம் முழுவதும் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆனால் தமக்கு அந்தப் பரிசை வழங்காமல் இருப்பது நோபல் குழுவிற்கே அவமானம் என்றும் வெள்ளை மாளிகையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


    • ஈரானுக்கு எச்சரிக்கை செய்வதாக நினைத்து உளறிய டிரம்ப் :

      டெக்சாஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் டியேகோ நகரங்களை வேண்டுமென்றால் ஈரான் தாக்கட்டும் என உளறியதால் அமேரிக்கா முழுவதும் பரபரப்பு - டிரம்புக்கு சம்பந்தபட்ட மாகாண ஆளுனர்கள் கண்டனம்

    • பிரான்சில் வெடிக்கும் கல்விப் போராட்டம் – 2.5 லட்சம் பேர் வீதியில்:

    • பள்ளிகளுக்கான கல்வி நிதி ஒதுக்கீட்டைக் குறைத்த மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் திரண்டு போராடினர்; பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் போலீசாருடன் கடும் மோதல் வெடித்தது.

    • பெல்ஜியத்திலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது:

      கல்விச் செலவு உயர்வு மற்றும் சீர்திருத்தங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு மொழி பேசும் பெல்ஜியம் மாணவர்கள் பிரஸ்ஸல்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • போலந்தில் 2 நாட்களில் இரண்டாவது பள்ளித் தாக்குதல்:

      போலந்தின் லெஸ்ஸிடோல்-நோவினி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் பள்ளிக் காப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர்.

    • "சூப்பர்-டூப்பர் எல் நினோ" – பூமி முழுவதும் சிவப்பு எச்சரிக்கை:

      பசிபிக் பெருங்கடலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் "சூப்பர் எல் நினோ" டிசம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டும் என்றும், உலக அளவில் தீவிர வறட்சியையும் அதேசமயம் வரலாறு காணாத மேகவெடிப்பு மழையையும் இது தூண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    • 2026 இலக்கியத்திற்கான நோபல் பரிசு:

      புகழ்பெற்ற கனடிய பெண் எழுத்தாளரும் கவிஞருமான அன்னே கார்சனுக்கு (Anne Carson) 2026-ம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ShareXFacebook

    Reader Comments

    Comments are reviewed by our desk before they appear. Sign in with your mobile number to join the discussion.

    Web Stories

    More stories ›